நடிகர் அஜித் என் மீது அக்கறை எடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்ததை மறக்கவே முடியாது என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். மங்காத்தா சூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி சமைத்துக் கொடுத்து மங்காத்தா படக்குழுவில் இடம்ப்பெற்றிருக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு, நடிகைகள் த்ரிஷா, கைனாத் அரோரா உள்ளிட்டோரை திக்குமுக்காட வைத்திருக்கும் அஜித், நடிகை அஞ்சலியை வேறொரு விதத்தில் கவர்ந்திருக்கிறார். மங்காத்தாவில் அஜித்துடன் நடிக்கும் இன்னொரு நாயகியான அஞ்சலி, அஜித் பற்றி அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரை தூரத்தில் நின்று பார்ப்பதே தனி சந்தோஷம். அப்படியிருக்கும்போது அவருடன் சேர்ந்து நடிப்பது என்றால் எப்படி இருக்கும்? அதிலும் அவர் மிகவும் அக்கறை எடுத்து எனக்கு காட்சிகள் பற்றி சொல்லித்தருவது, அட்வைஸ் செய்வது பரவசமான விஷயம். அஜித் சார் என்றாலே க்ரேட்தான், என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்
No comments:
Post a Comment