Wednesday, March 30, 2011

தலைவர் ஆவாரா தல?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.கவிற்கு ஆதரவு அளித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார். இந்நிலையில் கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் கோடம்பாக்கத்தில் தலையீடு அதிகமாகவே இருக்கிறது.

வேலாயுதம், மங்காத்தா படப்பிடிப்பு பின்னி மில்ஸில் நடைபெற்ற நாளில் இருந்து இருவருக்கும் இடையே ஆன நட்பு இன்னும் நெருங்கமாகி விட்டது. இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கமோ அ.தி.மு.க வுக்கு ஆதரவு என்று அறிவித்து விட்டது. அப்படி என்றால் அஜீத் வாய்ஸ் யாருக்கு என்று விசாரித்தால் இம்முறை யாருக்கும் இல்லை என்று கூறுகிறார்கள்.

முதல்வருக்கு நடந்த பாராட்டி விழாவில் மேடையிலேயே " இந்த விழாவிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்" என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதனையடுத்து அஜீத்திற்கு எதிர்ப்புகள் பல நிலவினாலும், அவர் அரசியலுக்கு வர போகிறார் என்ற பேச்சுமும் கிளம்பியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஆனால் இது மரியாதை நிமத்தமான சந்திப்பு என்று கூறினார். இதனை அடுத்து அஜீத் அமைதியாகி தான் நடித்து வரும் படங்களில் கவனம் செலுத்தி ஆரம்பித்து இன்றும் தொடர்கிறார்.

ஆனால் விஜய்யே அரசியல் எண்ட்ரி, நாகப்பட்டினம் போராட்டம் என அரசியல் உறுதிப்படுத்தினார். ஆனால் அஜீத்தோ மும்பையில் நடைபெறும் இறுதி கட்ட மங்காத்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். தேர்தல் நாள் மட்டும் சென்னைக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்கிறது மங்காத்தா படக்குழு

அரசியலுக்கு வந்து விட்டேன் என்று அறிவித்துள்ள விஜய், தனது சமீபத்திய நண்பரான அஜீத்தையும் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று எப்போது சொல்ல வைக்க போகிறாரோ?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...