Monday, March 14, 2011

"பில்லா-2" படத்திற்காக உடல் எடையை குறைக்கிறார் அஜீத்

"மங்காத்தா" படத்தை தொடர்ந்து, அஜீத் அடுத்து நடிக்க போகும் "பில்லா-2" படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க இருக்கிறார்.
அஜீத் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு கொண்டாட்டமான ஆண்டாக அமையப்போகிறது. இந்தாண்டு அவருக்கு இரண்டு படங்கள் வெளிவர இருக்கிறது ஒன்று "மங்காத்தா", மற்றொன்று "பில்லா-2". தற்போது மங்காத்தா படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் அஜீத். இந்தபடம் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீசாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அஜீத் நடிக்கும் படம் "பில்லா-2". இப்படத்தை "உன்னைப்போல் ஒருவன்" படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
"பில்லா-2" படத்தில் டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே இப்படத்தின் கதை. படம் முழுக்க அவரது இளமை காலத்து வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக அவரை இளமையாக காட்ட வேண்டும். ஆகையால் அஜீத் தனது உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இருக்கிறார். சுமார் 15கிலோ வரை தனது எடையை குறைக்க உள்ளார். மங்காத்தா படம் முடிந்த பின்னர் இதற்‌கான வேலையில் ஈடுபட இருக்கிறார் அஜீத்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...